1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பய‌ன்பாடுகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (19:43 IST)

பான்கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி? – ஆன்லைன் மூலம் ஈஸியாக செய்யலாம்!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு மார்ச் இறுதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் ஆதார் இணைக்காமல் உள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி 17.58 கோடி பேர் பான் மற்றும் ஆதாரை இணைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. மார்ச் இறுதி வரை மட்டுமே காலக்கெடு என்றாலும் பலர் ஆதார் எண் மற்றும் பான் எண்ணை இணைப்பது குறித்து சரியாக தெரியாததால் காலதாமதம் செய்து வருகின்றனர். ஆன்லைன் மூலமாக செலவின்றி எளிதாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு..

முதலில் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் இடது ஓரத்தில் Link Aadhar என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்

அதில் பான் எண், ஆதார் எண், ஆதாரில் உள்ளபடி பெயர் போன்றவற்றை உள்ளீடு செய்து இறுதியாக Link Aadhar என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஆதார் எண் இணைக்கப்பட்டதும் மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.

ஏற்கனவே இந்த வசதியை பயன்படுத்தி பதிவு செய்திருந்தால் அதன் ஸ்டேட்டசை இந்த பகுதியிலேயே சரிபார்த்தும் கொள்ள முடியும்