செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2020 (16:11 IST)

179 ரூபாயில் 2 லட்சம் ரூபாய் லைஃப் இன்ஸூரன்ஸ்.. ஏர்டெல்லின் அசத்தல் ஆஃப்பர்

ஏர்டெல் நிறுவனம் ரூ.179 க்கு அறிவிக்கப்பட்ட புதிய சலுகையில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள உயிர் காப்பீடு திட்டம் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு சேவையில் அனைத்து நெட்வொர்க்கிற்கும் அன்லிமிட்டட் கால், 2 ஜிபி டேட்டா பேக், 300 எஸ் எம் எஸ், ஆகியவை அடங்கிய ரூ.149 பேக் ஒன்றை வழங்கி வருகிறது. இந்நிலையில் பிரீபெய்டு சேவையில் இதே பலன்களுடன் 2 லட்சம் மதிப்புள்ள பார்தி ஆக்ஸா உயிர் காப்பீடு திட்டத்தையும் சேர்த்து தற்போது ரூ.179 க்கு வழங்கப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தில் ”Airtel Extreme App” பிரீமியம் சந்தா, மற்றும் Wynk Music பயன்படுத்தும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.