திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 19 மே 2018 (13:23 IST)

எடியூரப்பா ராஜினாமா? நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன் புது திருப்பம்!

கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது. அதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. 
 
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்ப இன்று காலை 10 மணிக்கு கர்நாடக சட்டமன்றம் கூடியது. காங்கிரஸ், பாஜக, மஜத கட்சி எம்எல்ஏக்களை தற்காலிக சபாநாயகர் கே.ஜி.போபையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 
இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில் காங்கிரச் எம்எல்ஏ ஒருவர் மாயமாகியுள்ளார். மேலும், காங்கிரஸ் மற்றும் மஜகவில் இருந்து எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் கொண்டுவர பாஜக பேரம் பேசி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. 
 
காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவேளை சட்டசபை வராவிட்டாலும் கூட பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல முடியாது. எனவே ஒருவேளை பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், எடியூரப்பா தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலையில் ஒளிபரப்ப பட வேண்டும் போன்ற பல உத்தரவுக்கு மத்தியில் எடியூரப்பாவின் அடுத்த கட்ட முடிவு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.