1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 19 மே 2018 (12:12 IST)

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் என்ன செய்வது? காங்கிரஸ் மாஸ்டர் ப்ளான்...

கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது. அதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. 
 
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்ப இன்று காலை 10 மணிக்கு கர்நாடக சட்டமன்றம் கூடியது. காங்கிரஸ், பாஜக, மஜத கட்சி எம்எல்ஏக்களை தற்காலிக சபாநாயகர் கே.ஜி.போபையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த முடிந்தவுடன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் காங்கிரஸ் - மஜக இறங்கியுள்ளது. 
 
ஆம், நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா தோற்றுவிட்டால், உச்சநீதிமன்றத்தில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்கும் விதமாக காங்கிரஸ் மற்றும் மஜக எம்எல்ஏக்களின் கையெழுத்துடன் கூடிய ஆதரவு கடிதத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். 
 
அந்த பிரமாணப்பத்திரத்தில் கையெழுத்திட்ட 116 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் - மஜக கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், குமாரசாமி முதல்வராக பதவியேற்க விரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.