திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2018 (17:15 IST)

மனைவியுடன் காதலியை அழைத்து வந்தால் ப்ரீ; வைரல் புகைப்படம்

காதலியுடன் வந்தால் 20%, மனைவியுடன் வந்தால் 45%, மனைவியுடன் காதலியை அழைத்து வந்தால் ப்ரீ என்ற புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது. 

 
காதலர் தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதல் ஜோடிகள் ரெஸ்டாரண்ட், மால், பூங்கா என அனைத்து இடங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.
 
அந்த அறிவிப்பு பலகை ஏதோ ரெஸ்டாரண்ர்ட்டில் உள்ளது போன்று தெரிகிறது. அதில், காதலியை அழைத்து வருபவர்களுக்கு 20% ஆஃபர், மனைவியை அழைத்து வருபவர்களுக்கு 45% ஆஃபர், மனைவியுடன் காதலியையும் சேர்த்து அழைத்து வருபவர்களுக்கு இலவசம் என்று எழுதப்பட்டுள்ளது.
 
இடம்பெறுள்ள வாசகத்தால் தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.