செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 12 பிப்ரவரி 2018 (16:27 IST)

காதலர் தினத்தை தடை செய்ய கோரி பாரத் சேனா போராட்டம்!

கோவையில் பாரத் சேனா அமைப்பினர் காதலர் தினக் கொண்டாட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை கொண்டாட காதலர்கள் தயாராகி உள்ளனர். அன்று தங்களின் காதலிக்கோ/ காதலனுக்கோ ரோஜாப் பூ, காதலர் தின வாழ்த்து அட்டை, பரிசு பொருட்கள் ஆகியவற்றை கொடுப்பார்கள். காதலர் தினத்தன்று பூங்கா, திரையரங்கம், கடற்கரை என பல இடங்களில் காதலர்கள் கூட்டம் அழைமோதும்.
 
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாரத் சேனா அமைப்பினர் பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் காதலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், காதலர் தினத்தை தடை செய்யுமாறும், காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்தும் போராட்டம் நடத்தினர்.