1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2018 (12:36 IST)

காதலன் கிடைக்காத பெண்கள் கவனத்திற்கு: வைரலாகும் ரெண்டல் பாய்பிரண்ட் போஸ்ட்

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலர் தின வாடகை காதலன் என்று ஃபேஸ்புக்கில் செய்த பதிவு வைரலாகியுள்ளது.

 
ஹரியானா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்த ஷாகுல் என்ற வாலிபரின் ஃபேஸ்புக் போஸ்ட் வைரலாகியுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு காதல் இல்லாத பெண்களுக்காக சிறப்பாக இந்த போஸ்ட் பதிவிடப்பட்டுள்ளது.
 
ஒருநாள் வாடகை காதலான அவர் தயார் என்றும் அதற்காக கட்டணங்கள் குறித்தும் பதிவிட்டுள்ளார். இதை அவர் கடந்த சனிக்கிழமை போஸ்ட் செய்துள்ளார். தற்போது வரை இந்த பதிவை 3,500 மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளார். 22,000 மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர்.
 
இந்த பதிவுடன் அவரது புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ஒரு ஜாலியான பதிவு என்றாலும் படு வைரலாக பரவி வருகிறது.