விஸ்வாசம்! இன்று முக்கியமான நாள்! கொண்டாடும் தல ரசிகர்கள்

Ajith, Viswasam,
VM| Last Updated: வெள்ளி, 23 நவம்பர் 2018 (12:47 IST)
விஸ்வாசம் படம் அறிவிச்சு இன்றுடன் ஒருவருடம் ஆகிவிட்டது. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்து வரும் படம் விஸ்வாசம்.

கிராமத்துக் கதையான இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் ராஜமுந்திரியில் நடந்தது.  படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.  பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Ajith, Viswasam,
விஸ்வாசம் படம் குறித்து சத்யஜோதி பிலிம்ஸ்  அதிகாரப்பூர்வமாக கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி இதே நாளில் தான் அறிவித்தது.  2018ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. இதனை டுவிட்டரில் ஹேஸ்டேக் போட்டு கொண்டாடி வரும் அஜித் ரசிகர்கள், விரைவில் டீசரை வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்


இதில் மேலும் படிக்கவும் :