குடும்பதோடு சென்னை திரும்பிய அஜித்தை சுற்றி வளைத்த ரசிகர்கள் - ஒரே செலஃபி தான்

Aijith, Airport
Last Modified சனி, 24 நவம்பர் 2018 (12:20 IST)
கோவாவில் இருந்து குடும்பத்தோடு சென்னை திரும்பிய அஜித்தை ஏர்போர்ட்டில் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். செலஃபி,  வீடியோக்களை எடுத்து இணையத்தில்  வைரலாக்கி வருகின்றனர் . 
பொதுவாகவே திரையுலகைச் சேர்ந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு அலாதி ஆர்வம் . ஆனால் தங்களது புகழ் வெளிச்சம், குடும்பத்தார் மீது குறிப்பாக குழந்தைகள் தங்கள் மீது படர்வதை பல முன்னணி பிரபலங்கள் விரும்புவதில்லை. இதனாலேயே கேமராக் கண்களுக்கு அவர்களை மறைத்தே வளர்க்கின்றனர். 
 
ஆனால், செல்போன் உதவியால் எப்போதும் கேமராவுடன் அனைவரும் வளம் வருவதால் இது சாத்தியப்படுவதில்லை. பொது இடங்களில் இத்தகைய பிரபலங்களைப் பார்க்கும்போது உடனடியாக அவர்களை தங்களது கேமராவிற்குள் பிடித்துவிடவே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 
 
கடந்த சில தினங்களுக்கு முன் விஸ்வாசம் பட வேலைகள் முடிந்து ஓய்விற்காக தனது குடும்பத்துடன் கோவா சென்றார் அஜித். அப்போது விமான நிலையத்தில் அஜித் மகளுடன்  எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலானது. 
 
இந்நிலையில் தற்போது ஓய்வு முடிந்து அவர் சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் அவரைக் குடும்பத்துடன் கண்ட ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். பிறகு சிலர் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
போன வீடியோவில் அஜித்தும், அவரது மகளும் இருந்தனர் . ஆனால் இந்த வீடியோவில் ஷாலினியும், அவரது மகனும் தெளிவாக தெரிகின்றனர். 
 
இதைப் பார்த்து அஜித்தின் குழந்தைகள் மிகவும் பெரியவர்களாக வளர்ந்து விட்டனர் என அவரது ரசிகர்கள் ஆச்சர்யம் தெரிவித்து வருகின்றனர் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :