1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 28 ஏப்ரல் 2018 (16:30 IST)

திருமணத்திற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன்!

திருமணத்திற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன்!
கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது திருமணம் குறித்து கூறியுள்ளார்.
லண்டனைச் சேர்ந்த இத்தாலி நாட்டு நடிகர் மைக்கேல் கார்சேல் என்பவர் மீது ஸ்ருதிஹாசன் காதல் வயப்பட்டுள்ளதாகவும், இருவரும் ஒன்றாக ஊர்சுற்றுவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளது. இந்த கிசுகிசுக்களை வழக்கம் போல் ஸ்ருதிஹாசன் ஒப்புக்கொள்ளவும் இல்லை,மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் ஸ்ருதிஹாசனிடம் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்.