திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (10:35 IST)

சானியா மிர்சா கர்ப்பம்! டுவிட்டரில் படம் போட்டு சூசகமாக அறிவிப்பு

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தான் கர்ப்பமாக இருப்பதாக டுவிட்டரில் படம் போட்டு சூசகமாக தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவின் டென்னிஸ் விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரமான சானியா மிர்சா, கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அவர் திருமணத்திற்கு பின்னரும் ஒரு இந்திய பெண்ணாக இருந்து, இந்தியாவுக்காக பல வெற்றிகளை பெற்று தந்தார்
 
இந்த நிலையில் சானியா மிர்சா தற்போது கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை அவர் தனது டுவிட்டரில் ஒரு படம் வரைந்து சூசகமாக  தெரிவித்துள்ளார். ஒருபக்கம் மிர்சா என்ற படத்தையும் இன்னொரு பக்கம் மாலிக் என்ற படத்தையும் வரைந்து நடுவில் மிர்சா-மாலிக் என்ற சின்ன படத்தை வரைந்து தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார். இதே படத்தை சோயிப் மாலிக்கும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சானியா மிர்சாவுக்கு வரும் அக்டோபர் மாதம் குழந்தை பிறக்கும் என்றும், குழந்தை பிறந்த பின்னர் அவர் முழுநேர தாயாக மாறுவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தாயாகியுள்ள சானியாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.