தொடர்புடைய செய்திகள்
- நடராஜன் கவலைக்கிடம்: சசிகலா பரோல் வேண்டி மனு...
- சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சு வலியால் மருத்துவமனை அனுமதி
- சித்தராமையா கூறியதால்தான் சசிகலாவிற்கு சலுகை கொடுத்தேன் - சிறை டிஜிபி தகவல்
- சிறையில் முதல் வகுப்பு பெற வாய்ப்பிருந்தும் ஏற்காத சசிகலா - பின்னணி என்ன?
- கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளும் சசிகலா ; ஜாலியாக சுற்றும் சுதாகரன் : சிறை அப்டேட்
நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்; பரோலில் வரும் சசிகலா
சசிகலா கணவர் நடராஜன் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடராஜனுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் குளோபல் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குளோபல் மருத்துவமனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா பரோலில் வர இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
