1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 18 மார்ச் 2018 (10:04 IST)

நடராஜன் கவலைக்கிடம்: சசிகலா பரோல் வேண்டி மனு...

சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சு வலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே இவருக்கு உடலுறுப்பு மாற்று சிகிச்சை நடைபெற்றுள்ளது. 
 
நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கணவரை காண பரோல் வேண்டி மனு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

கணவரின் உடல் கவலைக்கிடமாக இருப்பதால் அவரை காண பரோல் வேண்டும் என சசிகலா குறிப்பிட்டுள்ளார். இவரது பரோல் மனு ஏற்கப்படுமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 
 
காரணம், சசிகாலாவின் நெருங்கிய உறவினர்களின் மரணத்தை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் இன்னும் 6 மாதங்களுக்கு பரோல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது என்று பரப்பன அக்ரஹார விதிகள் கூறுகிறதாம்.