திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 12 பிப்ரவரி 2018 (15:46 IST)

சட்டசபையில் வைக்கப்பட்ட ஜெ.வின் உருவப்படம் இதுதான்...

தமிழக சட்டசபையில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.உருவப்படத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.


மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.வின் உருவப்படம் சட்டபையில் அமைக்கப்படும் என கடந்த சனிக்கிழமை அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு சட்டமன்றத்தில் சிலை வைக்கக் கூடாது என திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன.

அந்நிலையில், எதிர்ப்புகளை மீறி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் இன்று காலை 9.30 மணியளவில் ஜெ.வின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். 7 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட  அவரின் உருவப்படத்தை, கவின் கல்லூரி முன்னாள் முதல்வர் மதியழகன் வரைந்துள்ளார்.



இந்நிலையில், சட்டசபையில் உள்ள ஜெ.வின் உருவப்படம் வெளியாகியுள்ளது. பச்சை நிற சேலையில் அமைக்கப்பட்டுள்ள ஜெ.வின் உருவப்படத்தில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் முதல் பெண் தலைவராக ஜெ.வின் உருவப்படம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சட்டமன்றதில் இடம் பெறும் 11வது தலைவராக ஜெ.வின் உருவப்படம் அமைந்துள்ளது.