1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2018 (02:05 IST)

உலகப்புகழ் பெற்ற இந்து கோவிலில் ஆபாச படம் எடுத்த இளைஞர்கள் கைது

உலகின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றான கம்போடியாவில் உள்ள அங்கோவார்ட் கோவிலில் பிரிட்டன் இளைஞர்கள் சிலர் ஆபாச பட்ம் எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கம்போடியா மீடியாக்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி அங்கோவார்ட் கோவிலுக்கு சுற்றுலா பயணிகளாக வந்த பிரிட்டன் குழுவினர் இரவு பார்ட்டிகளில் அரைகுறையாக நடனம் ஆடுவது போன்றும், ஆபாச போஸ்களில் இருப்பது போன்றும் புகைப்படங்கள் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தவே உடனே களத்தில் இறங்கிய போலீசார் இதுகுறித்து ஐந்து பிரிட்டன் இளைஞர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த குழுவில் உள்ள பெண்களை போலீசார் கைது செய்யவில்லை என்றாலும் அவர்களிடமும் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.