சட்டசபையில் டிடிவி தினகரன் - முதல் கூட்டம் தொடங்கியது
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டபேரவை கூட்டம் தற்போது தொடங்கியதுள்ளது.
2018ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 9.45 மணியளவில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டசபைக்கு வந்தார்.
ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் முதல் முறையாக இன்று சட்டசபை கூட்டத்திற்கு வந்தார். அவருக்கு 148வது இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. முதன் முறையாக சட்டசபைக்கு வந்த தினகரனுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் நேரு, பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச தொடங்கியதுமே, எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதன்பின் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆளுநர் உரையை புறக்கணித்தனர்.
ஆளுநர் பேசி முடித்ததும், எம்.எல்.ஏக்கள் மக்கள் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சுயேட்சை எம்.எல்.ஏ.வான தினகரனுக்கு வருகிற 10ம் தேதி பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.