இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடர் –சில ருசிகர சம்பவங்கள்

Last Modified திங்கள், 15 அக்டோபர் 2018 (11:05 IST)
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இந்த தொடர் பற்றிய சில சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.

இத்தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றதன் மூலம் பிருத்வி ஷா அறிமுகத் தொடரிலேயே ஆட்டநாயகன் விருது பெற்றவர்களின் பட்டியலில் பத்தாவது ஆளாக இடம் பெற்றுள்ளார். இதற்கு முன் இந்தியா சார்பாக கங்குலி, அஸ்வின், ரோஹித் சர்மா போன்றோர் இந்த சாதனையைச் செய்துள்ளனர்.

இந்தியா மேற்கு இந்திய தீவுகள் அணிக்கௌ எதிராக நடந்த கடந்த 21 டெஸ்ட் போட்டிகளில் ஒருமுறை கூட தோல்வியடையாமல் விளையாடி வருகிறது.

இந்தியாவில் கடைசியாக நடந்த 10 டெஸ்ட் போட்டித் தொடர்களிலும் வென்று ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்துள்ளது. 2012-ல் இருந்து தற்போது வரை தனது சொந்த மண்ணில் நடந்த அனைத்து டெஸ்ட் தொடரையும் இந்தியா வென்றுள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியா இந்த சாதனையை இரண்டு முறை நிகழ்த்தியுள்ளது.

இந்தியா பத்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ள எட்டாவது போட்டி இதுவாகும்.இதில் மேலும் படிக்கவும் :