புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (18:23 IST)

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நம்ம பிரதமர் மோடிதான் ’இன்ஸ்பிரேசன்’ போல...

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்ற  தேர்தலில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் தெரீக் - இ - இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பிரமராகவும் பதவியேற்றார்.
அதன் பின் அரசு சொகுசு வசதிகள் பயன் படுத்தப்போவதில்லை என அறிவித்தார். அதனையடுத்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும்  தூதுவிட்டார். ஆனால் குழந்தையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதையும் போல  பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் மீது தக்குஹ்டல் நடத்துவதை மறைமுகமாகவே அதரித்துவரும் பாகிஸ்தான் அரசின் இந்த போக்குக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே மோடி இம்ரான் கானுடனான சந்திப்பை நிராகரித்தார்.
 
அதற்கு பதிலளித்த இம்ரான் கான் இந்தியா ஆவணபோக்குடன் நடந்து கொள்கிறது என குற்றம் சாட்டினார். இதனை மோடி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
 
இந்நிலையில் நம் பாரத பிரதமர் மோடி இந்தியாவில் அறிமுகம் செய்துவைத்துள்ள தூய்மை இந்தியா திட்டத்தை போன்று இம்ரான்கானும் பாகிஸ்தானில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார்.
 
இதை அந்நாட்டு ஊடகங்கள் பெரிதாக விளம்பரப்படுத்தி வருகின்றன.
 
இது பாகிஸ்தானுக்கு புதிதாக இருந்தாலும் நம் பிரதமர் மோடி இந்தியாவில் அறிமுகம் செய்துவைத்த இத்திட்டத்தைதான் அந்நாட்ட்டில்  இம்ரான்கான்  பிரதி எடுக்கிறாரோ என கேள்வி எழுந்துள்ளது.