செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : திங்கள், 30 ஏப்ரல் 2018 (13:29 IST)

'நாளை முதல் 'செம வெயிட்' ஆகும் காலா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் பாடல்கள் மே மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த இரண்டு அறிவிப்புகளையும் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்து உறுதி செய்துள்ள நிலையில் சற்றுமுன் 'காலா' குறித்த இன்னொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
 
அதன்படி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'செம வெயிட்டு' என்று தொடங்கும் பாடல் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக தனுஷ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை வரவேற்க இப்போதே ரஜினி ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.
 
ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹூமாகுரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டேல், சுகன்யா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு முரளி ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.