திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (17:52 IST)

ரஜினி தன் தாய்மொழிக்கு துரோகம் செய்கிறார்: பாரதிராஜா

கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட ரஜினி, தான் ஒரு தமிழர் என்று கூறியதன் மூலம் தனது தாய்மொழிக்கு அவர் துரோகம் செய்வதாக இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.
 
காவிரி மேலாண்மை வாரியத்திற்காக போராடுவதாக கூறும் இயக்குனர் பாரதிராஜா, பெரும்பாலும் ரஜினியை குறிவைத்தே விமர்சனம் செய்து வருகிறார்,. இவருடைய பின்னணியில் வேறொரு பிரபலம் இருப்பதாகவும், ரஜினிக்கு நெகட்டிவ் இமேஜை உண்டாக்க அவர் பாரதிராஜாவை பயன்படுத்தி கொள்வதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது
 
இந்த நிலையில் நான் ஒரு தமிழன் என ரஜினி கூறுவது அவரது தாய் மொழிக்கு செய்யும் துரோகம் என்றும் தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? என்றும் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முதலில் எதிரியை துரத்துவோம் என்றும் பின்னர் அண்ணன், தம்பி பிரச்னைகளை பார்த்துக்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.