அமெரிக்காவில் ஸ்டைலான ரஜினி: வைரலாகும் புகைப்படங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் உடல்நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் அமெரிக்காவில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யவுள்ளதாகவும், அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ரஜினியின் ஸ்டைலான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தோளில் பையுடன் கூலிங் கிளாஸ் கண்ணாடி அணிந்து எஸ்கலேட்டரில் ரஜினி இறங்கி வரும் புகைப்படம் செம ஸ்டைலாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ரஜினி ரசிகர்கள் எடுத்த இந்த புகைப்படங்களை ரஜினி ரசிகர்கள் மிக அதிகமாக ஷேர் செய்து வருவதால் இந்த புகைப்படங்கள் டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது.