1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Updated : வெள்ளி, 2 நவம்பர் 2018 (18:31 IST)

உருவாகுது ‘சண்டகோழி 3’! கதை எழுதுகிறார் லிங்குசாமி

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் ரிலீஸான ‘சண்டகோழி 2’ நல்ல வரவேற்பை பெற்றதால் 3ம் பாகம் தயாராக உள்ளது.
2005-ம் ஆண்டு விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் நடித்த  ‘சண்டகோழி’ படம் விஷாலுக்கு திருப்புமுனையாக அமைந்த படம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை லிங்குசாமியே இயக்கினார். விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க,  ராஜ்கிரண், வரலட்சுமி சரத்குமார், கஞ்சா கருப்பு, சண்முகராஜன், ஹரீஷ் பெராடி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். யுவன்  சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்தார். 
 
இந்த படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி நல்ல வசூலை குவித்தது. இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை மட்டும் 19 கோடி ரூபாய்  கொடுத்து சன் டிவி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நல்ல லாபம் காரணமாக மூன்றாம் பாகத்தைத் தொடங்கத்  திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. தன் கையில் இருக்கும் படங்களை விஷால் முடித்துக் கொடுப்பதற்குள், மூன்றாம் பாகத்துக்கான  கதையை எழுதி முடிக்க லிங்குசாமி திட்டமிட்டுள்ளாராம்.