1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Updated : சனி, 3 நவம்பர் 2018 (11:24 IST)

ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்த விஜய்

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் நவம்பர் 6ம் தேதி தீபாவளி அன்று வெளியாகிறது. இதனால் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் சர்கார் கொண்டாட்டத்துக்கு தயாராக உள்ளனர்.
தியேட்டர்களில் வைக்க விஜய்யின் கட் அவுட்களை தயார் செய்துள்ளனர். கொடி தோரணங்கள், பேனர்களும் வைக்கிறார்கள். விஜய் கட்  அவுட்களுக்கு குடம் குடமாக பால் ஊற்றி அபிஷேகம் செய்யவும் திட்டமிட்டு உள்ளனர். இது விஜய் கவனத்துக்கு வந்ததால் யாரும் பால்  அபிஷேகம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார். அந்த பாலை ஏழை குழந்தைகளுக்கு வழங்குங்கள் என்றும் கூறியுள்ளார்.