ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் '96'
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கிய '96; திரைப்படம் கடந்த மாதம் 7ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியாகி இன்னும் திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஹிட் படம் ஒன்று ஒரே மாதத்தில் டிவியில் ஒளிபரப்பு செய்வது என்பது கோலிவுட் திரையுலகில் அபூர்வமாக நடைபெறும் நிகழ்வாக கருதப்படுகிறது. ராம், ஜானுவை ரசிகர்கள் கொண்டாடி வருவதால் இந்த படத்திற்கு தியேட்டர்களில் ரிப்பீட் ஆடியன்ஸ்கள் அதிகளவு வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தீபாவளி தினத்தில் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த படத்திற்கு நிச்சயம் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி தினத்தன்று காலையில் திரையரங்கில் 'சர்கார்' என்ற அதிரடி படத்தை பார்க்கும் ரசிகர்கள் மாலையில் ஒரு இனிமையான ரொமான்ஸ் படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது