ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 2 நவம்பர் 2018 (21:07 IST)

175 அடி கட்-அவுட்: கொல்லம் விஜய் ரசிகர்கள் செய்த இந்திய சாதனை

விஜய் படம் வெளியாகும் தினத்தை அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வரும் நிலையில் திருவிழா அன்றே விஜய் படம் வெளிவந்தால் விட்டு வைப்பார்களா?

விஜய் நடித்த சர்கார்' திரைப்படம் கதைத்திருட்டு என்ற சர்ச்சையில் சிக்கினாலும் இந்த படத்திற்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.

இந்த நிலையில் 'சர்கார்' திரைப்படம் வெளியாக இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் இந்த படத்திற்காக திரையரங்குகளில் கட் அவுட் வைக்கும் பணியை விஜய் ரசிகர்கள் தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் விஜய்க்கு 175 அடி கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்தவொரு சினிமா நடிகருக்கும்  இவ்வளவு பெரிய கட் அவுட் வைக்கப்படவில்லை என்பதால் இதுவொரு சாதனையாக கருதப்படுகிறது.

இந்த கட்-அவுட்டை பார்க்க கொல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.