தொடர்புடைய செய்திகள்
- கடம்பூர் ராஜூவின் மெரீனா பிச்சை குறித்த கருத்துக்கு துரைமுருகன் பதிலடி
- தமிழிசை என்ன எலிசபெத் ராணியா? - கலாய்த்த துரைமுருகன்
- அதிமுக போட்ட பிச்சையால் தான் கருணாநிதிக்கு அரசு மரியாதை - கடம்பூர் ராஜூ கருத்தால் பரபரப்பு
- வைகோவும், நானும் கலைஞரால் முகவரி கிடைக்கப் பெற்றவர்கள்: தி. மு.க. பொருளாளர் துரைமுருகன்
- விஜயபாஸ்கருக்கு புதிய பதவி கொடுக்க காரணம் என்ன? துரை முருகன் வெளியிட்டுள்ள பகீர் தகவல்!!
கடம்பூர் ராஜூவின் மெரீனா பிச்சை குறித்த கருத்துக்கு துரைமுருகன் பதிலடி
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்கியது அதிமுக அரசு போட்ட பிச்சை என்று இன்று காலை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருந்தார். அமைச்சரின் இந்த கருத்துக்கு திமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் கருத்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். மெரினாவில் இடத்தை அரசு ஒதுக்கி இருந்தால் அது பிச்சை என்று கூறலாம். ஆனால் நீங்கள்தான் இடத்தை ஒதுக்கவே இல்லையே. நீதிமன்றத்தின் ஆணையினால் தானே கலைஞருக்கு மெரீனாவில் இடம் கிடைத்தது.
மேலும் ஒரு அமைச்சருக்கான தகுதி, கண்ணியத்தை மறந்து கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் பற்றி தெரியாத ஒரு அமைச்சர் இப்படி கண்ணியம் இழந்து கீழ்த்தரமாக பேசுவது சரியல்ல என்று துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
