செவ்வாய், 16 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (10:10 IST)

அதிமுக போட்ட பிச்சையால் தான் கருணாநிதிக்கு அரசு மரியாதை - கடம்பூர் ராஜூ கருத்தால் பரபரப்பு

அதிமுக போட்ட பிச்சையால் தான் கருணாநிதிக்கு அரசு மரியாதை  - கடம்பூர் ராஜூ கருத்தால் பரபரப்பு
கருணாந்திக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டது அதிமுக போட்ட பிச்சை என விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைபாடு காரணமாக கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடல் மெரினாவில் அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மெரீனாவில் கருணாநிதிக்கு அதிமுக போனால் போகட்டும் என்று தான் இடம் கொடுத்தது. அதேபோல் கருணாநிதிக்கு அரசு மரியாதை தந்தது அதிமுக போட்ட பிச்சை என கூறினார். 
அதிமுக போட்ட பிச்சையால் தான் கருணாநிதிக்கு அரசு மரியாதை  - கடம்பூர் ராஜூ கருத்தால் பரபரப்பு
அமைச்சரின் இந்த பேச்சால் கூட்டத்தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஒரு முன்னாள் முதலமைச்சரை இப்படியா கீழ்த்தரமாக பேசுவது என கடம்பூர் ராஜூவிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.