கல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கில் அழகேசன் மீது குண்டர் சட்டம்

Last Modified புதன், 18 ஏப்ரல் 2018 (12:59 IST)
கடந்த மாதம் சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள மீனாட்சி கல்லூரி அருகே அக்கல்லூரியில் பிகாம் படித்து வந்த அஸ்வினி என்ற மாணவியை அழகேசன் என்பவர் நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அழகேசன், அஸ்வினியை காதலித்ததாகவும், முதலில் அழகேசனை காதலித்த அஸ்வினி பின்னர் திடீரென மனமாற்றம் ஏற்பட்டு காதலை தட்டிக்கழித்ததாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அஸ்வினியை அழகேசன் கொலை செய்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அழகேசன் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் அழகேசன் மீது குண்டாஸ் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் அழகேசன் சிக்கியுள்ளதால் அவருக்கு ஒரு வருடத்திற்கு ஜாமீன் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :