உடலை வாங்க மாட்டோம்: போர்க்கொடி தூக்கும் அஸ்வினி உறவினர்கள்

Last Updated: சனி, 10 மார்ச் 2018 (09:34 IST)
சென்னையில் நேற்று கல்லூரி மாணவி அஸ்வினியை அழகேசன் என்ற வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்த விவகாரம் சென்னையை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. உலக மகளிர் தினத்திற்கு முந்தைய நாள் உஷா பரிதாபமாக போலீஸ் ஒருவரால் பலியான நிலையில் அதே தினத்திற்கு அடுத்த நாள் அஸ்வினியின் உயிர் பறிபோயுள்ளது தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது

இந்த நிலையில் அஸ்வினியின் உடல் நேற்று பிரேதபரிசோதனை முடிந்த நிலையில் அவரது உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

அஸ்வினி படிப்பிற்கு அழகேசன் பணம் அளித்ததாக கூறுவது தவறு என்றும் அவர் எந்த பணமும் அளிக்கவில்லை என்றும் தங்களுக்கு எந்த உதவியும் அழகேசன் செய்யவில்லை என்றும் அஸ்வினி உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அஸ்வினி கொலைக்கு மதுரவாயல் காவல்துறையினர் தான் தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்றும், அஸ்வினிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியும் அவர்கள் பாதுகாப்பு அளிக்கவில்லை என்பதால் தான் இந்த துயரம் நடந்ததாகவும் அஸ்வினி உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும்
அழகேசனுக்கு உடனடியாக தகுந்த தண்டனை வழங்க வேண்டும். இல்லையெனில் அவரது உடலை வாங்க மாட்டோம் என்றும் உறவினர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :