அவனை என்ன பண்ண போறீங்க! அஸ்வினி உடலை பெற்றுக்கொண்ட பின் கதறிய தாய்

Last Modified சனி, 10 மார்ச் 2018 (11:45 IST)
சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி மரணம் அவரது குடும்பத்தார்களை குறிப்பாக அவரது தாயை நிலைகுலைய வைத்துள்ளது. அஸ்வினி மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை, அழகேசனுக்கு தகுந்த தண்டனை வழங்கும் வரை அஸ்வினி உடலை வாங்க போவதில்லை என்று அவரது தாய் உள்பட உறவினர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில் அஸ்வினி கொலை வழக்கில் அழகேசனுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என போலீசார் உறுதி அளித்ததன் பேரில் அஸ்வினி உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

அஸ்வினியின் உடலை பார்த்து கதறி அழுத அவரது தாய், நான் வீட்டுவேலை செய்து எனது குழந்தையை படிக்க வைத்தேன். அழகேசன் பணம் கொடுத்ததாக கூறியதிலும் இருவருக்கும் திருமணம் ஆனதாக கூறியதிலும் உண்மை இல்லை. அவனை என்ன பண்ண போறீங்க, எனக்கு நீதி வேண்டும், எனது குழந்தையின் மரணத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று அஸ்வினி தாயின் கதறியபடி கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :