1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. sruthihaasan talk about kamalhaasan non veg interest

ஃபிரிட்ஜில் கடல் குதிரை குழம்பு!.. என் அப்பா வேறலெவல்!.. ஸ்ருதிஹாசன் பேட்டி....

sruthihaasan
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். பாடகியான ஸ்ருதிஹாசன் சினிமாவில் நிறைய பாடல்களையும் பாடியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஸ்ருதியின் அப்பா மற்றும்
நடிகர் கமல்ஹாசன் பிராமணராக இருந்தாலும் பகுத்தறிவு கொள்கை கொண்டவர். அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியொன்றில் ஸ்ருதிஹாசன் ஒரு முக்கிய தகவலை சொல்லியிருக்கிறார். முதலை, ஒட்டகம், கடல் குதிரை முதல் குட்டி ஆக்டோபஸ் வரை பல வித்தியாசமான உணவுகளை நான் சாப்பிட்டு வளர்ந்தேன். என் அப்பாவுக்கு வித்தியாசமான உணவுகளை சமைத்து பார்ப்பதில் அதிக ஆர்வம் உண்டு. ஈசல் போன்ற பூச்சுகளைக் கூட வீட்டிலேயே சமைப்பார். ஒருமுறை ஃபிரிட்ஜை திறந்த போது அதில் கடல் குதிரை குழம்பு இருந்தது. அதுவரை கடல் குதிரைகள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதே தெரியாது’ என்று ஜாலியாக சொல்லியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
2,500 டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு விட தவெக அரசு திட்டமா? முதல்வர் தீவிர பரிசீலனை...