1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
  4. vj vaishnavi said she jained with nanjil vijayan

இனிமே ஒன்னா குடும்பமா வாழப்போறோம்!.. விஜே வைஷ்ணவி பதிவு.. நெட்டிசன்கள் ஷாக்!...

nanjil vijayan
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில காமெடி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவருக்கு திருமணமாகி குழந்தை இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நாஞ்சில் விஜயன் தன்னுடன் பழகிவிட்டு, தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக திருநங்கை விஜே வைஷ்ணவி பரபரப்பு புகாரை கூறியிருந்தார்,

ஆனால், நாஞ்சில் விஜயன் இந்த புகாரை மறுத்தார். அந்தநிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு விஜே வைஷ்ணவி தொடர்பாக தனது வீட்டில் பிரச்சனை எழுந்ததாகவும், தற்போது தனது மனைவி, குழந்தையை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் நாஞ்சில் விஜயன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்..

இதையடுத்து வீடியோ வெளியிட்ட விஜே வைஷ்ணவி ‘நாஞ்சில் விஜயன் தனது தவறை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் புகாரளித்தேன்.. மற்றபடி அவரின் மனைவியை பிரிந்து வாழ வேண்டும் என்று நான் விரும்பவில்லை’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், விஜே வைஷண்வி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘மனம் திறந்து பேசினோம், கசப்புகள் எல்லாம் மறந்தோம், மீண்டும் பழையபடி இணைந்தோம். இனி குடும்பமாக ஒன்றிணைந்து நிறைய சாதிப்போம். எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி... இப்படிக்கு உங்கள் விஜெ வைஷு நாஞ்சில்விஜயன்’ என பதிவிட்டிருக்கிறார். nanjil vijayan அதாவது நாஞ்சில் விஜயனுடன் மீண்டும் தான் சேர்ந்து விட்டது போல அவர் அந்த பதிவை வெளியிட்டிருக்கிறார். இது நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதையடுத்து ‘நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கும் நிலையில், நீ மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ்வேன் என்று சொல்வது சரியா?’ என்று நெட்டிசன்கள் அவரை திட்டி வருகிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பண கஷ்டம்!.. வீட்ட அடமானம் வச்சிட்டேன்!.. அசோக் செல்வன் உருக்கம்...