அடப்பாவத்த … பழைய எபிசோட்களை மறு ஒளிபரப்பு செய்யும் சேனல்கள்!

Last Modified சனி, 28 மார்ச் 2020 (15:52 IST)

தொலைக்காட்சிகள் தங்கள் சீரியல்களுக்கான புது எபிசோட்கள் இல்லாமல் மீண்டும் பழைய எபிசோட்களையே ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா படப்பிடிப்புகளும் முடங்கியுள்ளன. முக்கியமாக சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டு 10 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது.

தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெறாததால் அடுத்த எபிசோடுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் டிவி சேனல்கள் குழப்பத்தில் உள்ளன. 1990களில் இருந்து செயல்பட்டு வரும் டிவி சேனல்கள் தங்களது புதிய சீரியல்களில் ஹூட்டிங்க் தடைப்பட்டுள்ளதால் அந்த நேரத்தில் பழைய டிவி சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்ய தொடங்கியுள்ளன. சின சேனல்கள் மீண்டும் பழைய எபிசோட்களையே ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளன. ஆனால் சில சேனல்கள் அந்த ஸ்லாட்களில் திரைப்படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளன.



இதில் மேலும் படிக்கவும் :