1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By BALA
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2026 (08:21 IST)

பிரதீப் ரங்கநாதனுக்கு ஹிட்டா? ஃபிளாப்பா?.. எல்.ஐ.கே முதல் நாள் வசூல் அப்டேட்!..

lik
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து உருவான LIK திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதியான நேற்று உலகமெங்கும் வெளியானது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இப்படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் கீர்த்தி ஷெட்டியின் அண்ணனாகவும், வில்லனாகவும் எஸ்.ஜே சூர்யா நடித்திருந்தார். அதோடு பிரதீப் ரங்கநாதனின் தந்தை வேடத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்திருந்தார்.

2060-ல் கதை நடப்பது போல ஒரு ஃபேண்டஸி காதல் கலந்த காமெடி திரைப்படத்தை விக்னேஷ் சிவன் கொடுத்திருந்தார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் படம் நேற்று வெளியானது..

படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.. சிலர் படம் நன்றாக இருப்பதாகவும்.. சிலர் படம் மோசமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். நல்ல கதை.. ஆனால் எடுத்த விதம் சரியில்லை என்பதை பொதுவான கருத்தாக இருக்கிறது..

இந்நிலையில் நேற்று வெளியான எல்.ஐ.கே திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 9.93 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.. இந்தியாவில் 7.93 கோடியும், வெளிநாடுகளில் 2 கோடியும் இப்படம் வசூல் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.