1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 மார்ச் 2020 (14:20 IST)

கொரோனா பாதிப்புள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன் யாருடன் தொடர்பில் இருந்தார்?

கொரோனா பாதிப்புள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன் யாருடன் தொடர்பில் இருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் தற்போது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
 
போரிஸ் ஜான்சனுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அவர் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் யார் யாருடன் யாருடன் தொடர்பில் இருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதன்படி, கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை பிரிட்டன் ராணி சந்திக்கவில்லை என்று பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. லாரா குன்ஸ்பர்க்பிபிசி கொரோனா வைரஸ் தொற்றை பிரிட்டன் அரசாங்கம் கையாளும் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் அரசின் தலைமை விஞ்ஞானி மற்றும் சிலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் போரிஸ் ஜான்சன்.
 
தற்போது ஜான்சன், தனது பணியை செய்யும் நிலைமையில் இருப்பதால், அவர் அவரது பணியை தொடர்ந்து செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை பிரதமர் போரிஸ் ஜான்சன் பணியில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அவருக்கு பதிலாக அவரது பணியை தொடர வெளியுறவுத்துறை செயலாளர் டோம்னிக் ராப் தயார் நிலையில் இருக்கிறார். சிறிது காலத்திற்கு முன்னர்தான், அந்நாட்டு சுகாதார அமைச்சர் நடைன் டோரிசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.