கொரோனா எதிரொலி: சரியும் சாம்சங், ஒப்போ, விவோ உற்பத்தி!
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் சாமசங், ஒப்போ, விவோ ஆகிய நிறுவனங்கள உற்பத்தியை நிறுத்தியுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,138 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு 3,91,947ஆக உயர்ந்த நிலையில் 1,02,843 பேர் குணமடைந்துள்ளனர். பல லட்சம் மக்கள் உலகம் முழுவதும் பாதித்துள்ள நிலையில் இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சாம்சங், ஒப்போ மற்றும் விவோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள தங்களது ஸ்மார்ட்போன் உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளன. அடுத்த அறிவிப்பு வரை சாம்சங் ஆலைகளில் உற்பத்தி துவங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கோரியுள்ளது. ஆனால், சில நிறுவனங்களின் ஆலைகளில் சமூக இடைவெளி அடிப்படையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.