திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By VM
Last Modified: வியாழன், 6 செப்டம்பர் 2018 (11:07 IST)

மக்களிடையே பிரபலமாகும் பிக்பாஸ் ரித்விகா

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி 78 நாட்களை தாண்டி வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் புது புது சர்ச்சையை கிளப்பும் டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

மும்தாஜூக்கும், விஜயலட்சுமிக்கும் சிறிய மனஸ்தாபங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் எலிமினேஷனிலிருந்து காப்பதற்கு சக போட்டியாளர்கள் பிக்பாஸ் கூறுவதை செய்ய வேண்டும்.

இதில் விஜயலட்சுமியை காப்பாற்ற ரித்விகா பிக் பாஸின் கண்ணை நன்கு தெரிகிற இடத்தில் நிரந்தர டாட்டுவாக போட்டுக்கொள்ள வேண்டும். இதை விஜயலெட்சுமி ரித்விகாவிடம் கூறுகையில் eye என்பதை தவறாக புரிந்துக்கொண்டு I என்று கூறுகிறார்.

உடனே மும்தாஜ் அது I இல்ல eye என நக்கலாக சிரிக்கிறார். உடன் பாலாஜியும் சிரிக்க விஜயலட்சுமியின் முகம் திடீரென மாறுகிறது. இதற்கிடையில் டாட்டுவிற்கு ரித்விகா ஓகே செல்கிறார்.



இதையடுத்து மும்தாஜ் எதற்கு இவ்வளவு கடினமான டாஸ்கை செய்ய வேண்டும் என ரித்விகாவிடம் கூற, விஜலெட்சுமியை காப்பாற்றுவதை விட இதை நான் இதை எதிர்கொள் விரும்புகிறேன் என்று கூறுகிறார். இதனால் ரித்விகாவிற்கு மக்களிடையே ஆதரவு கூடி வருகிறது.