செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Modified: செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (15:23 IST)

உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - முட்டிக்கொள்ளும் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி : சூடுபிடிக்கும் பிக்பாஸ்

இந்த வாரம் சூடு பிடித்திருக்கும் பிக்பாஸில் இன்றைய 3வது புரோமோவில் ஐஸ்வர்யாவிற்கும் விஜயலட்சுமிக்கும் சண்டை எற்படுவது போல் தெரிகிறது.
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் பாச மழை பொழிந்து தள்ளினர். அதற்கு நேர்மாறாக இந்த வாரத்தின் தொடக்கத்திலிருதே போட்டியாளர்களுக்குள் மோதல் உருவாகியுள்ளது. நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவிற்கும், விஜயலட்சுமிக்கும் மோதல் ஏற்பட்டது.
 
இந்நிலையில் இன்றைய பிக்பாஸின் 3வது புரோமோவில் சென்றாயனிடம் ஐஸ்வர்யா, "எனக்கு ஏற்கனவே நிறைய பிரச்னை இருக்கு. எழுந்து வாங்க" என்கிறார். அதற்கு, "உங்க இஷ்டத்துக்கு எல்லாம் நடந்துக்க முடியாது" என சென்றாயன் ஐஸ்வர்யாவிடம் கூறுகிறார். 
இதற்கு நடுவே குறுக்கிட்ட விஜயலட்சுமி நீங்கள் சொன்னது அவருக்கு புரியவில்லை என கூறுகிறார். இதனால் கடுப்பான ஐஸ்வர்யா நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். நான் உங்களிடம் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என காட்டமாக கூறுகிறார்.