புதன், 18 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 ஜனவரி 2026 (12:38 IST)

மகளுக்கு செல்போன் கொடுக்காத ஐஸ்வர்ய ராய்!.. இவரை பாத்து கத்துக்கணும்!...

aishwaraya rai
இந்தியாவிலிருந்து சென்று உலகி அழகிப் பட்டம் வாங்கி முதல் பெண் ஐஸ்வர்யா ராய். இவரால்தான் தமிழகதில் அழகுசாதான் பொருட்கள் விற்பனை அதிகரிக்க துவங்கியது. மணிரத்னம் இயக்கிய இருவர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
 அதன்பின் தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடித்தார். தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் ஆகிய படங்களில் நடித்தார்.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து அமிதாப்பச்சன் குடும்பத்தில் செட்டிலாகிவிட்டார். திருமணத்துக்கு பின்னரும் அவ்வப்போது சில படங்களில் நடித்தார் ஐஸ்வர்யா ராய். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராய்க்கு ஆரத்யா என்கிற மகள் இருக்கிறார். அவருக்கு தற்போது 14 வயதாகி விட்டது. ஆரத்யா ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை. அதேபோல் ஐஸ்வர்யாவும், அமிதாப்பச்சனும் அவருக்கு ஒரு செல்போனை கூட இதுவரை வாங்கி கொடுக்கவில்லை. அவ்வளவு கண்டிப்புடனும், கட்டுப்பாட்டுடனும் ஆரத்யாவை வளர்க்கிறார்களாம்.

மேலும் பெரியவர்களுக்கு மரியாதையை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிறைய நல்ல பழக்கங்களை மகளுக்கு சொல்லிக் கொடுத்து ஆரத்யாவை வளர்த்திருக்கிறார்களாம்.
சிறுவயதிலேயே குழந்தைகள் செல்போன் அடிமையாகி வரும் இந்த காலத்தில் 14 வயதாகியும் அவ்வளவு பணக்கார குடும்பத்தில் பிறந்தும் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆரத்யா செல்போன் பயன்படுத்தாமல் இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.