வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 செப்டம்பர் 2018 (09:39 IST)

முகத்தில் அடித்தால்போல் பேசிய மும்தாஜ்: அப்செட் ஆன ரித்விகா

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கொடுக்கப்பட்டிருக்கும் டாஸ்க்கை செய்தால் அடுத்த வாரம் நேரடியாக நாமினேட் செய்வதில் இருந்து போட்டியாளர்கள் தப்பிக்கலாம் என்று இருப்பதால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கை நிறைவேற்றுவதில் தீவிரமாக உள்ளனர்.

இதுவரை ஐஸ்வர்யா, செண்ட்ராயன், ஜனனி, விஜயலட்சுமி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த டாஸ்க்கை செய்துவிட்ட நிலையில் இன்று ரித்விகாவுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கின்படி அவர் மும்தாஜை சமாதானப்படுத்தி அவருடைய முடியின் கலரை மாற்ற செய்ய வேண்டும்

இதுகுறித்து ரித்விகா, மும்தாஜிடம் பேச அதற்கு மும்தாஜ் \தன்னால் முடியின் கலரை மாற்ற முடியாது என்று மறுத்துவிட்டார். தனக்காக இதை செய்ய வேண்டும் என்று ரித்விகா பணிவுடன் கேட்ட போதிலும் முகத்தில் அடித்தால்போல் இதனை நான் என் அம்மாவுக்காக கூட செய்ய மாட்டேன், என்று கூறியதால் ரித்விகா மிகுந்த அப்செட் அடைந்துள்ளார்.

கடந்த பல நாட்களாக அனைவரிடமும் பாசமழை பொழிந்துவந்த மும்தாஜ் தற்போது அவருடைய உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவே கருதப்படுகிறது.