புதன், 18 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Bala
Last Modified: வியாழன், 22 ஜனவரி 2026 (14:57 IST)

திருமணத்திற்கு பிறகு எப்படி மாறிட்டாங்க? வைரலாகும் சமந்தா வீடியோ

திருமணத்திற்கு பிறகு எப்படி மாறிட்டாங்க? வைரலாகும் சமந்தா வீடியோ
தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழில் பாணா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சமந்தா தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென தனி மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டார். இளைஞர்களின் கனவுக்கன்னியாகவே மாறினார். சமந்தாவுக்கு இருக்கும் ரசிகர்கள் வேறு எந்த நடிகைகளுக்கும் கிடையாது.
 
தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் நம்பர் ஒன் நடிகையாக மாறினார். இதற்கிடையில் அவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா இரண்டு வருடங்கள் இருவரும் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்றனர். நாக சைதன்யா ஒரு பக்கம் நடிகை சோபிதாவை திருமணம் செய்தார்.
 
சமந்தா கடந்த 1 ஆம் தேதிதான் பிரபல ஹிந்தி இயக்குனரான ராஜ் நிடிமொருவை திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் இருவருக்குமான புரிதல் சரியாக இருந்ததனால் திருமண பந்தத்தில் இந்த ஜோடி இணைந்தனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு  முதன் முறையாக சமந்தா தன் கணவரான ராஜ் நிடிமொருவுடன் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
 
அதில் சமந்தா சேலை அணிந்தவாறு மிகவும் அழகாக காணப்படுகிறார். நீண்ட நாளுக்கு பிறகு அவருடைய முகத்தில் சிரிப்பை பார்க்கமுடிகிறது. திருமணத்திற்கு பிறகு சமந்தா நடிப்பாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் சமந்தாவும் அவருடைய கணவரும் சினிமாவில் அவர்களுடைய பங்களிப்பை ஏதாவது ஒரு வகையில் வழங்குவார்கள் என்றே நம்பப்படுகிறது.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

video credit: indiaglitz