1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 7 டிசம்பர் 2022 (16:20 IST)

இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழையவிருக்கும் பிரபலம் யார் தெரியுமா?

இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழையவிருக்கும் பிரபலம் யார்  தெரியுமா?
தமிழ் சினிமாவின் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை அஞ்சலி கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். 
 
தொடர்ந்து அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்கள் மைல் கல்லாக அமைந்தது.
 
தொடர்ந்து தமிழ் தெலுங்கு உள்ளிட்டவற்றில் நடித்து வரும் அஞ்சலி தற்போது  ஃபால் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார். 
 
‘வெர்டிஜ்’ எனும் கனடிய வெப் தொடரான இது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் இன்று வெளியாகவுள்ளது. 
 
இதன் ப்ரோமோஷனுக்காக நடிகை அஞ்சலி இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.