கூடிய சீக்கிரம் அது நடக்க போகுது! எஸ்.ஜே. சூர்யா வைத்த சஸ்பென்ஸ்
தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து ஒரு மாஸ் வில்லனாக அவதரித்தவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. விஜய் , அஜித் இவர்களை வைத்து வாலி, குஷி போன்ற படங்களை கொடுத்து தரமான இயக்குனர் என்ற பேரையும் எடுத்தவர். அடுத்தும் நல்ல படங்களை கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஹீரோவாக களமிறங்கினார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் பெரும்பாலும் மக்களை கவரவில்லை.
அதன் பிறகுதான் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக மெர்சல் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தார். அதிலிருந்து தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளிலும் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். சிறந்த வில்லன் நடிகருக்கான பல விருதுகளை வென்றிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.
மீண்டும் இயக்குனராக வருவார் என்றுதான் ரசிகர்களின் ஆர்வமாகவும் இருக்கிறார். ஆனால் எஸ்.ஜே. சூர்யாவை பொறுத்தவரைக்கும் இயக்குனராகவும் இல்லாமல் வில்லனாகவும் இல்லாமல் வேறொரு கனவு இருக்கிறது. அதை நோக்கித்தான் என்னுடைய பயணமும் இருக்கிறது என்று சமீபத்திய ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
அதற்காகத்தான் கில்லர் திரைப்படத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அதுமட்டுமில்லாமல் ஹோட்டல் சர்வராக, உதவி இயக்குனராக, இயக்குனராக இப்போது நடிகராக இருக்கிறேன் என்றால் எல்லாம் அந்த கனவு நிறைவு வேண்டுமென்பதற்காகத்தான் என்றும் கூறியுள்ளார். அவருடைய ஒரே எண்ணம் எப்படியாவது ஹீரோவாக ஜொலிக்க வேண்டும் என்பதுதான்.
சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான மைலார்டு படம் கூட எஸ்.ஜே. சூர்யா நடிக்க வேண்டிய படம். ஆனால் அதன் இரண்டாம் பாதியில் சில கரெக்ஷன்ஸ் சொல்லியிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. இயக்குனருக்கு அதில் உடன்பாடு இல்லை. அதனால் அது சசிகுமார் நடிக்க வேண்டியதாகிவிட்டது.