புதன், 21 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 26 அக்டோபர் 2022 (11:15 IST)

பிக்பாஸ் வீட்டுக்குள் அடிதடி; ஷெரினாவை தாக்கிய தனலெட்சுமி? – பரபரப்பை கிளப்பும் ப்ரோமோ!

Bigg Boss 6
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பரபரப்பான 6வது சீசனில் போட்டியாளர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

விஜய் டிவியில் பிரபலமான பிக்பாஸ் தொடரின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே பரபரப்புக்கு பஞ்சமில்லாம் சென்று கொண்டிருக்கிறது. போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி.முத்து பாதியிலேயே வாக் அவுட் செய்துவிட்டார்.

ஆனாலும் தற்போது போட்டியாளர்கள் நடுவே கோஷ்டி மோதல் சூடு பிடித்துள்ளது. தற்போது ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற பெயரில் நடந்து வரும் பொம்மை டாஸ்க்கில் அசீம் பக்கம் ஒரு அணியாகவும், தனலெட்சுமி, ஷிவின் போன்றவர்கள் இணைந்து ஒரு அணியாகவும் செயல்படுகின்றனர்.

மற்றவர்கள் பொம்மையை ஸ்லாட்டில் வைக்கவிடாமல் செய்ய எல்லா சூழ்ச்சிகளும் நடக்கின்றன. நேற்றே ஷிவினின் பொம்மையை மகேஸ்வரியும், மகேஸ்வரியின் பொம்மையை தனலெட்சுமியும் எடுத்து வைத்துக் கொண்டு ஸ்லாட்டில் வைக்காமல் சண்டை போட்டது சர்ச்சையானது.


தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அடுத்த லெவலுக்காக பொம்மைகளை ஸ்லாட்டில் வைக்க செல்லும்போது இரு கோஷ்டிகளும் ஒருவரை ஒருவர் தடுத்துக் கொண்டு மோதிக் கொண்டு கீழே விழுகின்றனர். ஷிவின் கோஷ்டி மற்றவர்களை ஸ்லாட்டுக்கு செல்ல விடாமல் தடுப்பதாக தெரிகிறது.

தனலெட்சுமி ஷெரினாவையும், நிவாவையும் கீழே தள்ளிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அஸீம், தனலெட்சுமி இடையே வாக்குவாதமும் வலுத்துள்ளது. இந்த பரபரப்பான ப்ரோமோ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K