திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2022 (12:33 IST)

ஏம்லே சீவன வாங்குறிய.. ஜி.பி.முத்துவுக்கு நேர்ந்த தொல்லைகள்! – பிக்பாஸ் முதல் நாள் ப்ரோமோ!

GP Muthu
பிக்பாஸ் சீசன் 6 தொடங்கியுள்ள நிலையில் இன்று அதன் முதல் எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து 5 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதன் முதல் நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ள நிலையில் முதல் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.


அதில் வழக்கம்போல பிக்பாஸ் வீட்டை பராமரிப்பதற்கான கிச்சன், வெசல், க்ளீனிங், பாத்ரூம் என நான்கு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவுக்கு கிச்சன் பாத்திரங்களை கழுவும் பணி தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியிலும் 5 பேர் இருக்கின்றனர்.

இதற்கிடையே இரவு தூங்கி கொண்டிருந்த ஜி.பி.முத்துவை ராபர்ட் மாஸ்டர் பதுங்கி சென்று காலில் சுரண்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜி.பி.முத்து படுக்கையிலிருந்து தவறி விழுந்தார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edited By: Prasanth.K