1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified திங்கள், 10 அக்டோபர் 2022 (08:03 IST)

ஆதாமா..? அப்டினா..? கமல்ஹாசனை கலங்கடித்த ஜி.பி.முத்து! – வைரலாகும் வீடியோ!

Bigg Boss 6
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜி.பி.முத்து முதல்நாளே செய்த சேட்டைகள் வீடியோவாக வைரலாகியுள்ளது.

விஜய் டிவியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து 5 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் இந்த முறை டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


நேற்று போட்டியாளர்கள் அறிவிப்பு நிகழ்ச்சியில் முதல் ஆளாக வந்த ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சென்ற ஜி.பி.முத்து வீட்டில் யாரும் இல்லாததால் ‘தனியா இருக்க பயமா இருக்கு சார்’ என கமல்ஹாசனிடம் கூறினார்.

அதற்கு கமல்ஹாசன் ‘ஏவாள் வரும் வரை ஆதாம் எப்படி காத்திருந்திருப்பார்.. நீங்க கொஞ்ச நேரம் காத்திருக்க கூடாதா?’ என கேட்க, ஒன்றும் புரியாத ஜி.பி.முத்து ‘ஆதாமா? அப்டினா?” என அறியா பிள்ளையாய் கேட்க அனைவரும் சிரிக்க தொடங்கிவிட்டனர்.

பின்னர் கமல்ஹாசன் கதவை பூட்டிக் கொள்ளுமாறு சொன்னபோது ‘பூட்டு இல்லையே’ என ஜி.பி.முத்து அடித்த கவுண்ட்டர் கலகலப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

Edited By: Prasanth.K