பதவி, அதிகார மமதையால் என் மீது வழக்கு - டிடிவி தினகரன் பேச்சு!
பதவி, அதிகார மமதையால் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என தன் மீதுள்ள வழக்குகள் குறித்து டிடிவி தினகரன் பேச்சு.
அதிமுக திமுக கூட்டணியை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் தேமுதிக உள்பட ஒருசில கட்சிகள் இணைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து டிடிவி தினகரன் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது அமைச்சர் சிவி சண்முகம் தேர்தலில் வெற்றிபெற பண மூட்டையை மட்டுமே நம்பி உள்ளதாகவும் அவர் ரூபாய் 200 கோடி ரூபாய் பணத்தை செலவு செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார்.
தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பகிரங்கமாக டிடிவி தினகரன், 200 கோடி ரூபாய் அமைச்சர் சிவி சண்முகம் செலவு செய்ய உள்ளதாக கூறியுள்ளதை அடுத்து அதிமுகவினர் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து டிடிவி தினகரன், பணம் படுத்தும் பாடு இருக்கே... பதவி, அதிகார மமதையால் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என தன் மீதுள்ள வழக்குகள் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.