லைவைத்து படுக்கக்கூடாத திசைகள் எவை தெரியுமா...?

Sinoj| Last Modified புதன், 31 மார்ச் 2021 (00:01 IST)


நம் எல்லோருக்கும் தெரியும் நம் பூமியே சுற்றிலும் ஒரு காந்த படுகை இருக்கிறது. கிரகங்களும் காந்த முனைவுகளை கொண்டுள்ளது, நம் கிரகங்கள் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதியை நோக்கி காந்த துருவம் அமைந்திருக்கிறது.
திசை காட்டும் கருவியின் மேல்முனை எப்போதும் வடக்கு நோக்கி இருக்கும், எதிர் முனை தெற்கு பகுதியை நோக்கியே இருக்கும். இந்த காந்த சக்தியை முன்பே
விஞ்ஞானம் வளராத காலத்திலேயே நம் முன்னோர்கள் வடக்கு பக்கம் தலை வைக்காதே என்று சொல்லியிருக்கிறார்கள்.

தெற்கு, கிழக்கு பகுதிகளில் சமமான ஈர்ப்பு சக்தி இருக்கிறது. அதனால் நாம் தூங்கி எழும் போது சுறுசுறுப்பாகவும் மனது ரிலாக்ஸாகவும் உடல் நலக்குறைவு இல்லாமல் எழுந்திருக்க முடியும்.
நமது கிரகங்கள் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுற்றி வருகிறது. மேலும் சூரியனின் காந்த துருவம் கிழக்கில் இருந்து பூமிக்குள் வருகிறது. இதன் அழுத்தம் நம் தலை வழியாக வெளியேற பார்க்கும் போது அதிகபடியான வெப்பம் எதிர் நோக்கி எழும்பும் போது நம் தலையில் ஒரு வித ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு நோய்வாய்
ஏற்படும் நிலையும் வருகிறது. இதன் அடிப்படையிலேயே தான் வீட்டின் முகப்பு கூட வைக்கப்படுகிறது.
வடக்கு மற்றும் மேற்கு பக்கம் தலை வைத்து படுப்பதால் நோய்கள் அதிகமாகவும் உடம்பில் சோர்வுத் தன்மையும், மூளையை மந்த புத்தி ஆக்குவதாகவும் சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இரவு உணவு எப்போதும் கஞ்சனை போல சாப்பிட வேண்டும். அதாவது மதிய உணவு உண்பது போல உண்ணக்கூடாது, உறங்கும் போது கிழக்கு பக்கம் தலைவைத்து மேற்கு பக்கம் கால் நீட்டவும் அல்லது தெற்கு பகுதியில் தலை வைத்து வடக்கு பக்கம் கால் நீட்டவும். இதற்கு எதிர்மறையான நிலையில் உறங்குபவர்கள் எப்பொழுதும் எரிச்சலும் சோம்பேறித்தனமும், தன்னம்பிக்கையும் இழந்து காணப்படுவார்களாம்.


இதில் மேலும் படிக்கவும் :