வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
  3. தேர்தல் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 31 மார்ச் 2021 (08:01 IST)

செருப்பை தூக்கி அடித்து முந்தானையை பிடித்து இழுத்து - சுந்தர்.சி பிரச்சாரத்தி வேதனை!

2010 ஆம் ஆண்டு என் மனைவி குஷ்பு தாக்கப்பட்டது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என பிரச்சாரத்தின் போது சுந்தர்.சி பேச்சு. 

 
ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் திருமதி குஷ்பு சுந்தர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். தொகுதியில் வீடு வீடாகச் சென்று வேட்பாளர்களைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், குஷ்புவை ஆதரித்து அவரது கணவர் மற்றும் நடிகர் சுந்தர் சி பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அப்போது அவர், 2010 ஆம் ஆண்டு என் மனைவி குஷ்பு தாக்கப்பட்டது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. செருப்பை தூக்கி அடித்து முந்தானையை பிடித்து எடுத்து தாக்குதல் நடந்ததைக் கேள்விப்பட்டு ஹைதராபாத்தில் இருந்தா நான் பதறிப்போனேன். என் வாழ்வில் மறக்க முடியாத நாளில் அதுவும் ஒன்று. 
 
என் வீட்டில் தாக்குதல் நடத்தும் போது நான் பட்ட கஷ்டம் எல்லாம் சாதாரணம் தான். நான் பிரச்சாரத்துக்கு வருவதற்கு அதுதான் விதை. சினிமாவில் காட்டக்கூடிய அரசியலுக்கும் நிஜ அரசியலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. அது நிழல், இது நிஜம் என பேசினார்.