1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 மார்ச் 2021 (13:32 IST)

காங். தரக்கூடாது... போராட்டத்தில் தீக்குளிக்க முயற்சித்து பரபரப்பு!

அறந்தாங்கி தொகுதியை காங்கிரசுக்கு விட்டு தர எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கூட்டணி கட்சிகளையும் அவற்றிற்கான தொகுதிகளை ஒதுக்கும் பணிகளையும் வேக வேகமாக நடத்தி முடித்தது.  
 
அதன்படி, திமுக தனது கூட்டணியில் 12 கட்சிகளை இணைத்துக்கொண்டுள்ளது. திமுக - 174, காங்கிரஸ் - 25, சி.பி.எம் - 6, சிபிஐ - 6, விசிக - 6, மதிமுக - 6, ஐ.யூ.எம்.எல் - 3, கொ.ம.தே.க - 3, மமக - 2, த.வா.க - 1, ஆ.த.பேரவை - 1, ம.வி.க - 1 என தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், அறந்தாங்கி தொகுதியை காங்கிரசுக்கு விட்டு தர எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் இருவர் தீக்குளிக்க முயற்சி செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.